ஜி 7 உச்சி மாநாடு - இன்று பங்கேற்கும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி,இன்றும் நாளையும் நடைபெறும் 48-வது ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.;

Update: 2022-06-26 02:51 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி,இன்றும் நாளையும் நடைபெறும் 48-வது ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.அதன்படி,G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் இன்று சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்.

இது தொடர்பாக,பிரதமர் கூறுகையில்:

"சுற்றுச்சூழல்,எரிசக்தி,காலநிலை, உணவுப் பாதுகாப்பு,சுகாதாரம்,பயங்கரவாத எதிர்ப்பு,பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து G7 நாடுகள், G7 கூட்டணி நாடுகள் மற்றும் விருந்தினர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறேன்",என்று தெரிவித்தார்.

இதனையடுத்து,G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு,பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு (UAE),நாளை மறுதினம் (ஜூன் 28) பயணம் மேற்கொள்கிறார்.அங்கு சென்று முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட இரங்கல் தெரிவிக்கிறார்.அதே சமயம்,ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராகவும்,அபுதாபியின் ஆட்சியாளராகவும் நியமிக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி வாழ்தவுள்ளதாக கூறப்படுகிறது.அதன்பின்னர்,பிரதமர் மோடி ஜூன் 28 அன்று இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்