குழந்தை இல்லாததால் விரக்தி: தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குழந்தை இல்லாததால் விரக்தியால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-11 18:45 GMT

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா புஞ்சலகட்டேயில் வாமதபதவு அருகே குக்கிப்பாபாடியை சேர்ந்தவர் கங்காதர். இவரது மனைவி ஜெயந்தி (வயது 36). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் தம்பதிக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாததால் ஜெயந்தி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புஞ்சலகட்டே போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குழந்தை இல்லாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து புஞ்சலகட்டே போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்