விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து 1,150 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து 1,150 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சிங்கரபோவிதொட்டி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ராமநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சாலையோர தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து போலீசார் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்தவர்களை மீட்க சென்றனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து போலீசார் லாரியில் சோதனை செய்தனர். அப்போது அதில் மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்து 1,150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபாட்டில்களை மர்மநபர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.