அரசு பஸ் டிரைவர் கொலையில் நண்பர் கைது

கலபுரகி அருகே அரசு பஸ் டிரைவர் கொலையில் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-01 20:46 GMT

கலபுரகி-

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா சிதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசரணப்பா. இவர் அரசு பஸ் டிரைவர் ஆவார். இந்த நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி சிதனூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் சிவசரணப்பா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் தலையில் கல்லை போட்டு மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்சல்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிவசரணப்பாவை கொலை செய்ததாக அவரது நண்பரான பாலபீமா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் பழிக்கு, பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்து உள்ளது. அதாவது கடந்த மாதம் 11-ந் தேதி சிவசரணப்பாவும், பாலபீமாவும் சேர்ந்து மதுஅருந்தி உள்ளனர். அப்போது பாலபீமா தனது பெரியப்பா விபத்தில் இறந்தது பற்றி பேசி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் குடிபோதையில் இருந்த சிவசரணப்பா, பாலபீமாவிடம் உனது பெரியப்பா விபத்தில் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு நான் கூட பணம் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலபீமா, சிவசரணப்பா தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்