குஜராத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

குஜராத் மாநிலம் வல்சாத் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-07-19 13:22 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் சரக்கு ரெயில் ஒன்று சூரத் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. வல்சாத் மற்றும் சூரத் நிலையங்களுக்கு இடையே ரெயில் வந்துகொண்டிருந்தபோது சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் திடீரென புரண்டன.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே பணியாளர்கள், விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்த நிலையில், இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்