திருப்பதி கோவிலில் இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து

இன்றும், நாளையும் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு கவுண்டர்கள் மூடப்பட்டன.;

Update: 2022-12-31 08:03 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இலவச நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தபட்டது.

திருப்பதி அலிப்பிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்றும், நாளையும் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு கவுண்டர்கள் மூடப்பட்டன. புத்தாண்டையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டும் அனுமதிக்கபடுகின்றனர்.

தேவஸ்தான அதிகாரிகள் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தேவஸ்தான அதிகாரிகள் முறையான அறிவிப்பு வெளியிட்டு பக்தர்களின் குழப்பத்தை போக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்