சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு இலவச வீட்டுமனை பட்டா; கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்

விராஜ்பேட்டையில் சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு இலவச வீட்டுமனை பட்டாகளை கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-10-20 19:00 GMT

குடகு;

குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ, சுஜா குஷாலப்பா எம்.எல்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இலவச வீட்டு மனை பத்திரம் மற்றும் பட்டா வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போப்பையா எம்.எல்.ஏ கூறியதாவது:- மாநில அரசின் வாஜ்பாஸ் நகரத் திட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் பொது பிரிவை சேர்ந்த 30 பயனாளிகளுக்கும், அம்பேத்கர் நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 11 பட்டியலின மற்றும் பழங்குடியினர்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கான உரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டது.

இதை பயனாளிகள் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட கூடாது. அரசு திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்குவதற்கு தகுந்த வகையில் வீடுகள் கட்டி கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்