'இலவச பூஸ்டர் டோஸ், ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும்' - பிரதமர் மோடி பாராட்டு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ‘இலவச பூஸ்டர் டோஸ், ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும்’ என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-13 20:42 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. நாடு விடுதலையடைந்த 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 75 நாட்களுக்கு இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது.

மத்திய மந்திரிசபையின் இந்த முடிவை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'கொரோனாவை எதித்து போராடுவதற்கு தடுப்பூசி ஒரு சிறந்த ஆயுதமாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் போடும் மந்திரிசபையின் இன்றைய முடிவு, இந்தியாவின் தடுப்பூசி பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் ஒரு ஆரோக்கியமான நாட்டையும் உருவாக்கும்' என்று பாராட்டு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்