மேல்மருவத்தூர், சபரிமலைக்கு பக்தர்கள் இலவசமாக செல்ல வசதி

- மேல்மருவத்தூர், சபரி மலைக்கு பக்தர்கள் இலவசமாக சென்றுவர தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-10-22 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கொரோனா பரவல்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் நேற்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கோலார் தங்கவயல் தொகுதியில் உள்ள பக்தர்கள் மேல்மருவத்தூர் மற்றும் சபரி மலைக்கு சென்று சாமியை தரிசிக்க வசதியாக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இலவசமாக செய்து கொடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வெளியூர்களில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பக்தர்கள் மீண்டும் கோவிலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பக்தர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இலவச போக்குவரத்து சேவை மற்றும் பல்வேறு உதவிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ரூ.8 கோடி செலவில்...

இதற்காக பக்தர்கள் எம்.எல்.ஏ.வையோ அல்லது நகரசபை தலைவரையோ அணுகலாம். கோலார் தங்கவயல் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தாலுகா நிர்வாக அலுவலகமான மினி விதானசவுதா புதிய கட்டிட திறப்பு விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ராபர்ட்சன்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.8 கோடி செலவில் நவீன வசதிகள் அடங்கிய சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. அதுவும் மக்கள் சேவைக்கு திறக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்