ஆன்லைனில் வாங்கிய பொருளை திருப்பி கொடுத்தபோது நூதன மோசடி..ரூ.3.52 லட்சம் அபேஸ்

பணத்தை திருப்பி வாங்குவதற்காக அந்த நிறுவனம் கேட்ட அத்தனை தகவல்களையும் அனுப்பி வைத்ததே மோசடிக்கு காரணம் ஆகிவிட்டது.

Update: 2024-02-20 11:27 GMT

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுதாகர் . இவர் ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்தார். ஒரு வாரத்திற்கு பின் இவருக்கு ஜீன்ஸ் பேண்ட் வந்தது. கூரியரில் வந்த பொருளை பிரித்துப் பார்த்தபோது தரம் இல்லாமல் இருந்ததால் அதனை திருப்பி அனுப்பி வைத்து விட்டார். பணத்தை அனுப்பி வைக்க சரியான முகவரி , ஆதார் அட்டை , வங்கி கணக்கு விவரங்களை தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி நிறுவனம் கேட்டுக் கொண்டது.

அவரும் பணத்தை திருப்பி வாங்குவதற்காக அந்த நிறுவனம் கேட்ட அத்தனை தகவல்களையும் அனுப்பி வைத்து விட்டார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து நிறுவனத்தில் இருந்து பணம் திரும்பி வந்துள்ளதா என்று சரி பார்த்தபோது இவரது கணக்கில் இருந்து ரூபாய் 3.52 லட்சம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வங்கி மேலாளரிடம் கேட்டபோது உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் இரண்டு நாட்கள் கழித்து வந்ததால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டனர். பணத்தை இழந்த சுதாகர் தற்போது சாகர் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்