வங்கி அதிகாரி போல் பேசி வக்கீலிடம் ரூ.93 ஆயிரம் மோசடி
வங்கி அதிகாரி போல் பேசி வக்கீலிடம் ரூ.93 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு கூடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாத், வக்கீல். வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர், ஜெகன்நாத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வங்கி கணக்குடன், பான் கார்டுவை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று ஜெகன்நாத்திடம் மர்மநபர் தெரிவித்தார்.
இதையடுத்து, தனது வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு பற்றிய தகவல்களையும், தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் அந்த நபரிடம் ஜெகன்நாத் கூறினார். அவ்வாறு கூறிய சில நிமிடத்திலேயே ஜெகன்நாத் வங்கி கணக்கில் இருந்த ரூ.93 ஆயிரத்தை எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.