வெட்கி தலைகுனிகிறேன்; டெல்லி துணை நிலை ஆளுநர் வேதனை
தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் சடலமாக ஒரு காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் சடலமாக ஒரு காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ட்விட்டரில், "சுல்தான்புரியில் நடந்த சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன். இது மனிதாபிமானமற்ற கொடுங்குற்றம். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அசுர குணம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டெல்லி காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அனைத்து கோணங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சமூகம் பொறுப்பானதாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.