பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காலமானார்

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.;

Update: 2023-04-25 15:59 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல்(வயது 95), மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்