முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் - நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, பிரதமர் மரியாதை செலுத்தினர்.;
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 99-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் மத்திய மந்திரிகள், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.