முன்னாள் பெண் துணை மேயர் தற்கொலை முயற்சி

முன்னாள் பெண் துணை மேயர் தற்கொலை முயற்சி செய்தார்.

Update: 2022-08-14 21:12 GMT

பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவா் அன்வர் பாஷா. இவரது மனைவி சகதாஜ் கானம். முன்னாள் பெண் துணை மேயர். இந்த நிலையில், முகநூல் வீடியோவில் பேசிய சகதாஜ் கானம், எனக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். கணவர் அன்வர் பாஷா என்னை முத்தலாக் செய்வதாக அறிவித்துள்ளாா். எனக்கு தொல்லை கொடுக்கிறார்.

கணவருக்கு ஆதரவாக மந்திரி பைரதி பசவராஜ், கே.ஆர்.புரம் போலீசார் உள்ளனர். எனக்கு பிரதமர் நரேந்திர மோடி நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும். நான் தற்கொலை செய்ய போகிறேன், எனது சாவுக்கு கணவர், மந்திரி, கே.ஆர்.புரம் போலீசார் தான் என்று பேசி இருந்தார். வீடியோவை பார்த்து, தற்கொலைக்கு முயன்ற சகதாஜ் கானத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் சகதாஜ் கானம் கூறும் குற்றச்சாட்டுளை கே.ஆர்.புரம் போலீசார் மறுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்