முதியவரிடம் ரூ.3 லட்சம் நூதன மோசடி
பெங்களூருவில் முதியவரிடம் நூதன முறையில் மோசடி நடந்துள்ளது.;
பெங்களூரு:
பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் முதியவர் ராதா கிருஷ்ணன். இவருக்கு, ரூ.14 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக கிடைத்திருப்பதாக கூறி ஒரு கடிதம் வந்திருந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டார். அப்போது காரை பரிசாக பெறுவதற்காக, ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மர்மநபர் கூறியுள்ளார். இதையடுத்து, மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சத்தை ராதா கிருஷ்ணன் அனுப்பினார். அதன்பிறகு, காரை கொடுக்காமலும், ரூ.3 லட்சத்தை திரும்ப கொடுக்காமலும் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு மர்மநபர் மோசடி செய்துவிட்டார். இந்த நூதன மோசடி குறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.