கேரளாவில் விவசாயியை தாக்கி கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக புலியை வனப்பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சாலு என்ற தாமஸ், அவரது மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புலி ஒன்று சாலுவை தாக்கியதில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அந்த புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக புலியை வனப்பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று விவசாயியை தாக்கி கொன்ற அந்த புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.