ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவருடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ராவை மாலத்தீவுகள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் சந்தித்து பேசினார்.

Update: 2022-08-28 09:32 GMT

புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (யுஎன்ஜிஏ) தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார். இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ராவை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது.

அரசு முறை பயணமாக வந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

பொதுச் சபையின் 76-வது அமர்வின் தலைவராக உள்ள அப்துல்லா ஷாஹித்தின் ஓராண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்