விநாயகர் சிலைக்கு முஸ்லிம்கள் சிறப்பு பூஜை

விநாயகர் சிலைக்கு முஸ்லிம்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

Update: 2022-09-03 20:56 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா டவுனில் கைலாசம் தியேட்டர் அருகில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்து மகா சபை சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விநாயகர் சிலைக்கு இந்துக்களுடன் சேர்ந்து அப்பகுதி முஸ்லிம்களும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். நேற்று முஸ்லிம் தலைவர் மசூத் அகமது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்கட்டாக இந்த நிகழ்வு நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்