ஐக்கிய நாடுகள் அவையில் ரஷியாவுக்கு எதிராக முதல் முறையாக இந்தியா வாக்களிப்பு?

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்த பிறகு , ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து இருப்பது இதுதான் முதல் தடவையாகும்.

Update: 2022-08-25 16:14 GMT

ஜெனீவா,

ஐக்கிய நாடுகள் அவையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல் முறையாக ரஷியாவுக்கு எதிராக வாக்களித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் ரஷியாவிற்கு எதிராக இதுவரை நடந்த வாக்கெடுப்புகளில் எல்லாம் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தே வந்தது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் அவையில் காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கு அழைப்பு விடுப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா ரஷியாவுக்கு எதிராக வாக்களித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்த பிறகு , ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து இருப்பது இதுதான் முதல் தடவையாகும். இதனிடையே, இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரிந்தம் பக்சி, " எனது புரிதல் என்னவென்றால் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதே.. ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு நாங்கள் ஆதரவு மட்டுமே அளித்தோம். ஜெலன்ஸ்கி 3-வது முறையாக ஐ.நாவில் பேச உள்ளார் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இருமுறை இதுபோல அவர் உரையாற்றி இருக்கிறார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்