பெண்கள் வீட்டு வேலையை மட்டும் செய்தால் குடும்பத்தில் வன்முறையை தவிர்க்கலாம் - மராட்டிய மந்திரி சர்ச்சை கருத்து
மராட்டிய உள்துறை மந்திரி ஒரு பொது நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடம் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பை,
மராட்டிய உள்துறை மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான, திலீப் வால்ஸ் பாட்டீல் ஒரு பொது நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடம் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பாட்டீல், மராத்தியில் பேசுவதை காண முடிகிறது. அவர் கூறியதாவது:-
"ஆண்கள் வீட்டிற்கு வெளியிலும், பெண்கள் வீட்டு வேலையையும் செய்து கொண்டிருந்தால், குடும்பத்தில் வன்முறையை தவிர்க்கலாம், நல்ல திருமணங்கள் அப்படி தான் இருக்கும்" என்னும் பொருள்பட பேசினார்.
பெண்களை தாழ்த்தி பேசிய பாலியல் ரீதியான அவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எனினும், இந்த வீடியோ மீதான விமர்சனங்களுக்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை.