'மறக்க முடியாத நினைவுகள்' சசிதரூர் பதிவால் வெடித்தது சர்ச்சை

திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.;

Update: 2024-08-04 06:48 GMT

திருவனந்தபுரம், 

கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். 6-வது நாளாக இன்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோல வயநாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் சசி தரூர் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில், 'வயநாட்டில் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள்" என சசி தரூர் கூறியிருந்தார்.

மோசமான பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தை, 'மறக்க முடியாத நாள்' என்று சசி தரூர் குறிப்பிட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள சசி தரூர், மறக்க முடியாதது என்பது நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக் கூடிய ஒன்று என்ற பொருளில் சொன்னேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்