கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு விநியோகம்? அரசியல் கட்சிகள் கண்டனம்

உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு பரிமாறப்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.

Update: 2022-09-20 06:43 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ செப்டம்பர் 16ஆம் தேதி சஹாரன்பூரில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின் போது சில வீரர்களால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கழிவறை போன்ற தோற்றத்தில் உள்ள பல்வேறு பாத்திரங்களில் இருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லப்படுவதை வீடியோக்களில் காட்டப்படுகின்றது.

1 நிமிட வீடியோவில், ஃபிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்களைக் காட்டப்படுகிறது அதன் வாயிலுக்கு அருகில் உள்ள கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள சாப்பாடு காண்பிக்கப்படுகிறது. மீண்டும் விளையாட்டு வீரர்கள் உணவை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்கு வெளியே செல்வதைக் காணமுடிகிறது.

இரண்டாவது வீடியோ, ஊழியர்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, உணவு சமைக்கப்படும் நீச்சல் குளத்தின் அருகே வெளியே கொண்டு வருவதைக் காட்டுகிறது.

சஹாரன்பூரின் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா, "இட நெருக்கடி" காரணமாக உணவு 'மாற்றும் அறையில்' (கழிவறை) வைக்கப்பட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.

அதை கழிவறையில் வைக்கவில்லை, மழை பெய்ததால், நீச்சல் குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்தோம். நீச்சல் குளத்திற்குப் பக்கத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் உணவு வைக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மழையின் காரணமாக உணவை வைக்க வேறு இடம் தேவைப்பட்டது என கூறப்படுகிறது.

கபடி வீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் வைரலான வீடியோக்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பாஜகவைத் தாக்கி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்