ஒரே பண மழை...! பாடகி கீதா பென் ரபாரி மீது ரூ.4.5 கோடி நோட்டுகளை வீசிய மக்கள்...!
குஜராத்தி பாடகி கீதா பென் ரபாரியின் பாடலுக்கு, 4.5 கோடி ரூபாய் நோட்டுகளை வீசிய மக்கள்.
அகமதாபாத்:
பிரபல குஜராத் பாடகி கீதா பென் ரபாரி அவர் எங்கு சென்று பாடினாலும் அவருக்கு பணமழை அபிஷேகம் நடைபெறும்.
குஜராத் மாநிலம் கட்ச் நகரில் உள்ள ராப்பரில் நேற்று இரவு கீதா பென் ரபாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின் போது பாடகிக்கு பண அபிஷேகம் நடைபெற்றது.
கீதா ரபாரி நோட்டு மழை பொழிந்து நிகழ்ச்சியை நடத்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடகர் இன்ஸ்டாகிராமிலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதில் ரூ 4.50 கோடி நன்கொடை கிடைத்ததாக கீதா வீடியோவுடன் கூறி உள்ளார். மேலும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி" என கூறி உள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில், அவருக்கு டாலர் மழை பொழிந்தது அப்போது அவர் மீது ரூ.2.25 கோடி டாலர் பணமழை பொழிந்தது
கட்ச் கிராமத்தில் பிறந்த கீதா, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பாட தொடங்கினார்.