தெரு நாயை கல்லால் அடிக்க போய் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம்

டெல்லியில் தெரு நாயை கல்லால் அடிக்க போய் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2022-06-20 16:58 GMT



புதுடெல்லி,



வடக்கு டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் காலே ரெடி தெருவில் மொகித் (வயது 20) என்பவர் தனது இரண்டு நண்பர்களுடன் நேற்று மாலை நடந்து சென்றுள்ளார். அவர்களை நோக்கி அந்த பகுதியில் இருந்த நாய்கள் திடீரென குரைத்துள்ளன.

இதனால், பயந்து போன அவர்களில் ஒருவர் கல்லை எடுத்து ஒரு நாயின் மீது எறிந்துள்ளார். ஆனால், ராம்குமார் என்பவரது வீட்டு வாசல் கதவின் மீது அந்த கல் பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராம்குமார் மற்றும் அவரது இரு மகன்களான சவுரவ் மற்றும் ஜத்தின் ஆகியோர் அந்த 3 பேரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் குமாரின் மகன்கள் இருவரும், நண்பர்கள் 3 பேரும் லேசான காயமடைந்தனர். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதுபற்றி போலீஸ் துணை ஆணையாளர் சாகர் சிங் கல்சி கூறும்போது, இரு தரப்பு வாக்குமூலங்களையும் பெற்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்