அசாம் முதல்-மந்திரியின் மனைவியின் நிறுவனத்துக்கு மத்திய அரசு மானியம்? - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அசாம் முதல்-மந்திரியின் மனைவியின் நிறுவனத்துக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2023-09-13 20:57 GMT

கவுகாத்தி,

அசாம் மாநில பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி பூயன் சர்மா.

இவரது நிறுவனம் ஒன்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் இருந்து ரூ.10 கோடி மானியம் பெற்று இருப்பதாக அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் பிரதமர் மோடி கிசான் சம்படா திட்டத்தை தொடங்கினார். ஆனால் அசாமில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனம் ரூ.10 கோடி மானியத்துடன் கூடிய கடன் பெற உதவியுள்ளார். பா.ஜனதாவினரின் வளர்ச்சிக்காகத்தான் மத்திய அரசு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். இது மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஹிமந்தா பிஸ்வா சர்மா மறுத்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ மத்திய அரசிடம் இருந்து எந்த நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்