சிறுவர்கள் மோதலில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நபர் மீது துப்பாக்கி சூடு

டெல்லியில் சிறுவர்கள் மோதலில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நபர் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது.;

Update: 2022-12-12 08:26 GMT



புதுடெல்லி,


டெல்லியில் தட்சிணாபுரியில் நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சுரேஷ் சந்த் (வயது 49) என்பவர் நேற்றிரவு 9.30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்து உள்ளார்.

அவர் வரும் வழியில் 5 முதல் 6 சிறுவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு இருந்து உள்ளனர். இதனை அவர் கவனித்து உள்ளார். எனினும், சற்று நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

அதில், சுரேசுக்கும் இடது கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரது மகன், சுரேசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளார்.

அவருக்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதன்பின் அவரது உடல்நலம் தேறியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்