கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த தீயணைப்பு படையினர்

கிராம பஞ்சாயத்து கிணற்றில் செத்து மிதந்த மாடை மீட்ட தீயணைப்பு படையினர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

Update: 2023-01-28 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தாரதஹள்ளி கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட ஆலூர் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு 60 அடி கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணறு நீர்தான் அந்த பகுதி மக்களுக்கு குடிநீராக விளங்குகிறது. இந்த நீரை பலர் வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த, மாடு ஒன்று, கிணற்றின் மீது இருந்த இரும்பு கம்பி மீது ஏறியது. அப்போது எதிர்பாராவிதமாக மாடு கிணற்றிற்குள் விழுந்து செத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர், செத்து கிடந்த அந்த மாட்டை மீட்டனர். பின்னர் அந்த கிணற்றில் இருந்த நீர் முழுவதையும் வெளியேற்றினர். இதற்கிடையே அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மாடு இறந்து சில நாட்கள் கிணற்றிலேயே கிடந்தது. இதனால் அவை அழுகி துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் இந்த கிணற்றில் இருந்து கிராம மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதை பலர் குடித்ததாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரை குடித்த மக்களிடையே தொடர்ந்து பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து துர்நாற்றம் வீசியதால், கிருமி நாசினி தெளித்து, கிணற்றை சுத்தம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்