பட்டாசு கடை அனுமதி கோரி விண்ணப்பிக்க இன்றே கடைசி

பட்டாசு கடை அனுமதி கோரி விண்ணப்பிக்க இன்றே கடைசியாகும்.

Update: 2022-10-17 18:45 GMT

பெங்களூரு: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் திறந்து வியாபாரம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கி வருகிறது. அதன்படி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரிகள் பட்டாசு கடைகள் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பித்த வியாபாரிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடை திறக்க அனுமதி வழங்கப்படும். அதன்படி, வருகிற 20-ந் தேதி காலை 11 மணியளவில் மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து குலுக்கல் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்