இந்திய கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலில் தீ விபத்து

இந்திய கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-07-20 22:00 GMT

பெங்களூரு,

இந்தியாவின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. இந்த போர் கப்பல் நேற்று கர்நாடக மாநிலம் கார்வார் தளத்தில் இருந்து நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக போர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட கடற்படையினர் கப்பலில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் போர் கப்பலில் இருந்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கடற்படை விசாரணைக்க்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்