டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-01-19 04:15 IST
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி,

டெல்லியின் பிதம்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதன் மேல் தளங்களில் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனிடையே கட்டிடத்தில் சிக்கியிருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்