டெல்லி: பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

டெல்லி ரேகினி சிறை அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-06-26 02:54 GMT

புதுடெல்லி,

டெல்லி ரோகினி சிறைக்கு பின்புறம் உள்ள பட்லி பகுதியில் பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றிய தீ மள மள வென பொருட்கள் மீது பற்றி எரிய தொடங்கியது.

இந்த சம்பவம் தொடா்பாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினா் 24 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு அதிகாாிகள் தகவல் தொிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்