காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல்; ஜோதிராதித்ய சிந்தியா சொல்வது என்ன?

காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-27 10:26 GMT

கவாலியர்,

காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இது குறித்து ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருப்பதாவது; காங்கிரசில் நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த குழப்பம் தற்போது தெளிவாகத் தெரிகிறது.குலாம் நபி ஆசாத் ஒரு வழியாக இறுதியில் காங்கிரசில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸின் அனைத்து விதமான பதவிகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான முடிவுகளை அவர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்." என்றார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்