வங்கி பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூருவில் வங்கி பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2022-10-13 21:41 GMT

மங்களூரு:

மங்களூரு நகர் சக்திநகர் அருகே சர்பத்கட்டே பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 52). இவர் பிஜய் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் பத்மாவதி, புதிதாக பிளாட் ஒன்றை வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பத்மாவதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்