'சிப்' தட்டுப்பாடு நீடிப்பு - 6½ லட்சம் கார்கள் உற்பத்தியில் தாமதம்..!

‘சிப்’ தட்டுப்பாடு நீடிப்பதால் 6 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-22 00:46 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கார்களில் பொருத்தப்படும் 'சிப்' கருவிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உலக அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

'ஆர்டர்' செய்யப்பட்ட கார்களை உரிய காலத்தில் பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி மட்டும் 3 லட்சத்து 40 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்து அளிக்க முடியாமல் நிலுவையில் வைத்துள்ளது.

ஹூண்டாய், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள், 3 லட்சம் கார்களுக்கான ஆர்டரை நிலுவையில் வைத்துள்ளன.

டாடா மோட்டார்ஸ், கியா, ஹோண்டா கார்ஸ் ஆகியவையும் கணிசமான ஆர்டர்களை நிலுவையில் வைத்துள்ளன. மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், 2 மாதங்கள் முதல் 9 மாதங்கள்வரை காத்திருக்க வேண்டி இருப்பதாக இத்துறையின் நிபுணர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்