அரசு பஸ் மோதி தந்தை-மகன் பலி
ராய்ச்சூரில் அரசு பஸ் மோதி தந்தை-மகன் உயிரிழந்தனர்.;
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா வண்டலி ஓசூர் பகுதியில் மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வண்டலி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 35), அவரது மகன் அமரேஷ்(11) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
போலீஸ் விசாரணையில், ரமேஷ் தனது மகனுடன் தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது, ஹட்டியில் இருந்து தேவதுர்கா நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதும், இதில் தந்தை-மகன் உயிரிழந்ததும் தெரியவந்தது. விபத்து பற்றி ஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.