நிலக்கடலை செடிகளை பூச்சி தாக்கியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

நிலக்கடலை செடிகளை பூச்சி தாக்கியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-08 18:45 GMT

பெங்களூரு:

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா கரிமனே அருகே கிழமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா கவுடா (வயது 60). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தார். இதற்காக அவர் கனரா வங்கியில் ரூ.3 லட்சமும், கூட்டுறவு வங்கியில் ரூ.1½ லட்சமம் கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணப்பா சாகுபடி செய்திருந்த நிலக்கடலை செடிகளில் இலைப்புள்ளி நோய் தாக்கியது.

இதனால் நல்ல விளைச்சல் கிடைக்காது என கருதிய கிருஷ்ணப்பா, வாங்கி கடனை எப்படி அடைக்க போகிறோம் என்ற வேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டு அருகில் உள்ள மா மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி கரிமனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்