துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
உடுப்பியில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.;
உடுப்பி:
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா துர்கா கிராமம் டெல்லாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ஹெக்டே(வயது 63). விவசாயியான இவர் தனது வங்கியில் கடன் வாங்கி தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ஆனால் வனவிலங்குகள் அவரது விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாஸ்கர், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்று கருதி அவதி அடைந்தார்.
மேலும் பதற்றத்துக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் இருந்த துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார். இது குறித்து கார்கலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.