பிரபல ரவுடி அடித்து கொலை

பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் பிரபல ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2023-05-23 21:45 GMT

பெங்களூரு, மே.24-

பிரபல ரவுடி கொலை

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா 5-வது கிராஸ் செலுவப்பா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சாகர் (வயது 23). ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதேபோல் நவீன் என்பவரும் ரவுடி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், நவீன் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சாகரை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து நவீன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பகுதியினர் கே.பி.அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான சாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி சாகரை மற்றொரு ரவுடி நவீன் கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் கே.பி.அக்ரஹாரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்