நாக்பூர் அருகே தொழிற்சாலையில் வெடி விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நாக்பூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள தாம்னா என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள், ரசாயன பவுடர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் 1 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதாகவும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவீந்திர சிங்கல் தெரிவித்துள்ளார்.