நீடா அம்பானி கலாசார மைய விழாவில் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா...? உண்மை என்ன...?

டுவிட்டரில் வெளியான அந்த புகைப்படத்தில் டிஷ்யூ பேப்பர்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படம் உண்மையா?;

Update: 2023-04-04 11:45 GMT

மும்பை

முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தவர். இவருடைய வீட்டு விழாக்கள் எப்போதும் ஆடம்பரமாக இருக்கும். அண்மையில் அம்பானி வீடு பணியாளர்களின் கல்வித் தகுதியும், சம்பளமும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அங்கு வேலை செய்யும் ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மனைவி, நீடா அம்பானி நடத்திய கலாசார மைய திறப்பு விழாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

நீடா அம்பானி அண்மையில் பல்துறை கலாச்சார மையம் ஒன்றினை தொடங்கினார். இந்த மையம் கலை, கைவினை பொருள்களை காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழா ஆடம்பரமாக நடத்தப்பட்டது. விழா தொடர்பான ஒரு பார்ட்டியில் வைத்திருந்த டிஷ்யூ பேப்பர் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால் அவை காண்பதற்கு 500 ரூபாய் நோட்டுக்களை போல இருந்தன

டுவிட்டரில் வெளியான அந்த புகைப்படத்தில் டிஷ்யூ பேப்பர்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படம் உண்மையா? என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. அவை அந்த தட்டில் டிஸ்யூ பேப்பர்களுடன் இருந்த ஸ்வீட் தான் விலை அதிகமே தவிர, அந்த டிஷ்யூ பேப்பர்கள் சாதாரணமானவை. அவை 500 ரூபாய் நோட்டை போல அச்சடிக்கப்பட்டுள்ளன. அதனருகே இருந்த இனிப்பு வகைகளுக்கு 'தவுலத் கி சாட்' என பெயர். இது பணக்காரர்களின் இனிப்பு பண்டம் என அழைக்கப்படும். தட்டின் தோற்றத்தை உயர்த்த போலி பணம் அலங்காரமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.Fact CheckFact Check

ரிலைன்ஸ் குழுமத்தின் தலைவரான, முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, துவங்கியுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில், பல கோலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நீடா அம்பானி துவங்கியுள்ள கலாச்சார மையம், மும்பை பந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் பிரம்மாண்டமான திறக்கப்பட்டது.

பல வருடங்களாகவே இப்படி ஒரு கலாச்சார மையத்தை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த இவர், தற்போது தன்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்து, இந்த பிரமாண்டகலாச்சார மையத்தை துவங்கியுள்ளார்.

திறப்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பலர் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்த கலாச்சார மையம் குறித்து நீடா முகேஷ் அம்பானி கூறுகையில், இது ஒரு புனித பயணம் போன்றது. சினிமா, இசை, நடனம், நாடகம், இலக்கியம், கைவினைப் பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை சார்ந்து இங்கே ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாகவே இந்த, கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் வெளிப்படுத்தும் இடமாகவும், உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்காக இடமாகவும் இது திகழும் என கூறியுள்ளார்.

நீடா அம்பானியின் கனவாக இருந்த இந்த கலாச்சார மையம் குறித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு, அம்பானியின் மகள் இஷா அம்பானி வெளியிட்டார். இங்கு, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் உள்ளது போன்ற. தற்போது உலக தரம் வாய்ந்த கலாச்சாரா மையம் இந்திய கலைஞர்களுக்காக, அமைத்து கொடுத்துள்ளார் நீடா அம்பானி.

மேலும் இங்கு 2,000 இருக்கைகள் கொண்ட பிரமாண்ட திரையரங்கு, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட 250 இருக்கைகள் கொண்ட ஸ்டுடியோ தியேட்டர், மற்றும் டைனமிக் 125-இருக்கை கொண்ட கியூப். ஆகியவை இடம்பெற்றுள்ளது .

இது நான்கு மாடிகள் கொண்ட பிரத்யேக விஷுவல் ஆர்ட்ஸ் ஸ்பேஸ் -ஆர்ட் ஹவுஸ் இடம்பெற்றுள்ளது. அதே போல் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்க படும் பொருட்கள், மற்றும் பார்வையற்றவர்களால் தயாரிக்கப்படும், மெழுகு வர்த்திகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் பிரமாண்ட துவக்க விழாவில், முகேஷ் அம்பானி பிள்ளைகள், இஷா அம்பானி, அவரின் கணவர், மகன்கள் ஆகாஷ் அம்பானி ஆனந்த் அம்பானி ஆகியோர் தங்களின் மனைவிகளோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ரஜினிகாந்த், ஷாருக்கான் குடும்பத்தினர், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், அமீர் கான், சச்சின் தெண்டுல்கர், ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், வித்யா பாலன்,உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய பாரம்பரியத்தின் அடையாளங்களான நடனம், நாடகம், இசை, கலை மற்றும் பலவற்றின் மூலம் இந்தியாவின் கலைகளை விவரிக்கும் விதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பெரோஸ் அப்பாஸ் கானின் தி கிரேட் இந்தியன் மியூசிகல்: நாகரிக தேசம் என்ற இசை நிகழ்ச்சி, ஏப்ரல் 3, மாலை 7.30 மணிக்கு கிராண்ட் தியேட்டரில் நிகழ்த்தப்படும் என்றும் தற்கான டிக்கெட் விலை ரூ.400 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்திய உடைகளில் பேஷன் ஷோ, இந்தியாவில் தாக்கம் செலுத்திய சமகால கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டாடும் சங்கமம் கலைக் கண்காட்சிகள் போன்றவை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கு 199 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கலாச்சார மையம் குறித்து நீடா அம்பானி பேசும் போது "இந்த கலாச்சார மையம் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்" என்று பேசினார்.

விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஆனந்த் அம்பானி குர்தா, பைஜாமாவும் கலந்த கருப்பு நிற உடையணிந்திருந்தார். அவருடன் வந்த ராதிகா மெர்ச்சன்ட் கருப்பு நிற சேலையில் மிக அழகாக வந்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்