விதவை பெண் கொடூரக்கொலை... கண்கள் தோண்டி எடுப்பு - அதிரவைக்கும் பின்னணி

பெண்ணின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-10 10:30 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி (வயது 45). கணவரை இழந்து தனியே வசிந்து வந்த தேவி நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் வேலை தேவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தேவியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட தேவியின் கணவர் பப்லு சிங்கும், அவரது சகோதரரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக 2 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த குற்றவாளி கடந்த ஆண்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த அந்த குற்றவாளியே தேவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த குற்றவாளி எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதவை பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி தேவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்