நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு

நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-07-10 21:45 GMT

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் இளம்பெண் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் கூறியதன்பேரில் தொழில் அதிபர் நிர்வாணமாக வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசியதாக கூறப்படுகிறது. இதை இளம்பெண் வீடியோ எடுத்து உள்ளார். பின்னர் நிர்வாண வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று தொழில் அதிபரை இளம்பெண் மிரட்டி உள்ளார். ஆனால் தொழில் அதிபர் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தொழில் அதிபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சிலர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சாவுக்கு நீ தான் காரணம் என்றும் கூறியுள்ளனர். மேலும் உன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது என்று கூறி தொழில் அதிபரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்ததாக தெரிகிறது. மேலும் கூடுதலாக பணம் கேட்டு தொழில் அதிபருக்கு சிலர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தொழில் அதிபர், இளம்பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்