ஜம்மு காஷ்மீரில் 20 பயணிகளுடன் சென்ற மினி பேருந்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு - போலீசார் விசாரணை
ஜம்மு காஷ்மீரில் 20 பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்தில் வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.;
ராம்பன்,
ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்தில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (ஐஇடி) இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து எஸ்எஸ்பி ரம்பன் மோஹிதா சர்மா கூறும்போது, சந்தேகத்திற்கிடமான பொருளை எடுத்துச் செல்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நஷ்ரி சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனை செய்தபோது, மதியம் 12 மணியளவில் மினி பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தின் பின் இருக்கையில் கண்டெய்னர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருள், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. வெடிபொருளில் பயன்படுத்தப்பட்ட பொருள் என்ன என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.