மதுபானக் கொள்கை வழக்கு: கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்க இயக்குநரகத்தால் கவிதா கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-01 13:42 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய இரண்டு பணமோசடி வழக்குகளில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியின் முக்கிய தலைவர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனக்கும் கலால் கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனக்கு எதிராக குற்றச் சதி இருப்பதாகவும் கூறி கவிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

முன்னதாக கலால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 50 பேரில் அவர் தனி பெண் என்றும், சட்டம் பெண்களை வேறு தளத்தில் வைத்திருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கவிதாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED)ஆகியவை கவிதாவின் ஜாமீன் மனுக்களை எதிர்த்தது, சாட்சிகளை பாதிக்கும் அளவுக்கு அவர் சக்தி வாய்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்