'பாரதம்' என்ற பெயருக்கு வெங்கையா நாயுடு ஆதரவு..!!
‘இந்தியா' என்பதற்கு பதிலாக ‘பாரதம்' என்ற பெயரைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.;
ஐதராபாத்,
ஜி-20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் 'இந்தியா'வுக்கு பதில் 'பாரதம்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும். இதனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பழங்காலத்தில் இருந்தே நாடு பாரதம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சர்ச்சைகள் தேவை இல்லை. 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயரைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது குறித்து ஒரு முழுமையான அர்த்தமுள்ள விவாதம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.