குஜராத்தில் தேசியக்கொடி ஊர்வலத்தில் மாடுகள் புகுந்ததால் சலசலப்பு - முன்னாள் துணை முதல் மந்திரி மாடுகள் தாக்கியதில் காயம்!
குஜராத்தின் முன்னாள் துணை முதல் மந்திரி நிதின் படேல் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
காந்திநகர்,
குஜராத்தின் முன்னாள் துணை முதல் மந்திரி நிதின் படேல் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடி பகுதியில் இன்று நடைபெற்ற தேசியக்கொடி ஊர்வலத்தில் நிதின் படேல் பங்கேற்றார். இந்த பிரம்மாண்ட ஊர்வலத்தின் போது, மாடுகள் கூட்டமாக பேரணியில் நுழைந்துள்ளன. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் மாடுகளை விரட்டியுள்ளனர்.
அப்போது மாடுகள் தாக்கியதில் நிதின் படேலின் காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலையில் பயணிக்கும் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், முதல் மந்திரி பதவி வகித்த பாஜகவை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரை மாடு தாக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசு நிர்வாகம் பொதுவெளியில் இடையூறாக உலா வரும் சாலையோர மாடுகளை பிடித்து அடைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.