பா.ஜனதாவை சேர்ந்த 1000 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 300 எம்.பி.க்கள் அனைவரும் புனிதமானவர்களா? தேஜஸ்வி யாதவ் கேள்வி

பாஜக தலைவர்கள் யாருடைய வீட்டிலும் மத்திய அமைப்புகள் சோதனை நடத்தாதது ஏன் என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-09-02 09:30 GMT

பாட்னா,

ஊழல்வாதிகளை சில கட்சிகள் பாதுகாக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் வியாழக்கிழமை பேசினார். இந்நிலையில், பாஜக தலைவர்கள் யாருடைய வீட்டிலும் மத்திய அமைப்புகள் சோதனை நடத்தாதது ஏன் என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "பாஜகவிடம் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள் உள்ளனர், அவர்களில் யாருடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதா? அவர்கள் அனைவரும் புனிதமானவர்களா?

பா.ஜ.க.வில் சேருபவர் புனிதமானவர்களாக மாறுகிறார்களா. பாஜகவினர் ஏன் இங்கு ரெய்டு நடத்தவில்லை? அவர்களை யார் காப்பாற்றுகிறார்கள் என்று கேளுங்கள்?" என்றார்.

இது குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், "நான் கடந்த பல வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறேன்.அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது, ​​அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, இங்கும் பீகார் மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்துள்ளனர்.

மத்திய அரசில் உள்ள ஒருவர் சொல்வதை நான் கவனிக்கவில்லை.ஊழல்வாதிகளை யாரும் பாதுகாக்கவில்லை, மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்