'எதிர்கட்சிகளால் கூட மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது' - அமித்ஷா பேச்சு

ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2023-06-22 11:58 GMT

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"எதிர்க்கட்சிகளால் கூட மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள், இந்தியாவின் நிலத்தில் ஊடுருவி, நம் ராணுவ வீரர்களை கொன்றனர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு, அமைதியாக இருந்தது. மோடி பிரதமரான பிறகு, பாகிஸ்தான் அதையே செய்ய முயன்ற போது, நாம் 10 நாட்களுக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம்.

ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். சோனியா-மன்மோகன் ஆட்சி 10 ஆண்டுகள் நீடித்தது. இந்த 10 ஆண்டுகளில் ஊழல்களும், மோசடிகளும் மட்டுமே நடந்துள்ளது. காங்கிரஸ் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊழலை செய்துள்ளது. பிரதமர் தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் எதிர்க்கட்சிகளால் கூட ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாத அளவுக்கு வெளிப்படையான ஆட்சியை நடத்தினார்.

நாட்டைப் பாதுகாக்கும் பணியை மோடி செய்துள்ளார். நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகள், இந்தியாவின் பெருமையான ஒன்பது ஆண்டுகள் ஆகும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டாம், இல்லையெனில் ரத்த ஆறுகள் ஓடும் என்று ராகுல் காந்தி கூறி வந்தார். ஆனால் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், காஷ்மீரில் யாரும் கூழாங்கற்களைக் கூட வீசத் துணியவில்லை."

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்