'முதல்-மந்திரி பதவியை நான் விட்டாலும், அது என்னை விடுவதில்லை' - அசோக் கெலாட்
முதல்-மந்திரி பதவியை விட நினைத்தாலும், அந்த பதவி தன்னை விடுவதில்லை என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 25-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.
தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபோதும், எதிர்கட்சிகளை குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் முதல்-மந்திரி பதவியை விட்டு விலக வேண்டும் என்று நினைப்பதாகவும், ஆனால் அந்த பதவி தன்னை விடுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதை அசோக் கெலாட் சூசகமாக உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.